Posts

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? Life of a Plantation Child

Image
  தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? https://time.com/3984024/maternal-mortality-photos/ தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய்,  இல்லாட்டி மாடு மேய்க்க போடா........ நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற? நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல, இங்க வந்து என் உயிர எடுக்காதீங்கடா என கோபமாக கத்தினார் ஆசிரியர்...... தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? இவ்வார்த்தைகள் மணியின் மனதை துளைத்துகொண்டே  இருந்தது, தனது நண்பர்கள் முன்னே தன்னை ஆசிரியர் இவ்வாறு பேசியது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மனக்கஷ்டத்தையும், அவமானத்தையும் அடக்கிக்கொண்டு சகஜமாக தனது கல்வி காரியங்களில் ஈடுபட முயற்சித்தான்.   மலையகத்தில் கல்வி கற்ற,கல்வி கற்கும் நிறைய மாணவர்களுக்கு இக்கேள்வி ஓர் புதிய கேள்வி அல்ல, தனது பெற்றோர் படும் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது வெளியே வர துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் இவ் அனுபவங்களை தாண்டி வந்திருப...

Friends, Food and Fellowship

Image
Friends, Food and Fellowship  யோவான் 15 : 12 - 13 நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.  இயேசுவின் வாழ்நாளை பார்க்கும் பொழுது, அவர் ஓர் மக்கள் மனிதன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், ஏனெனில், எப்போதும் அவரை சுற்றி மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. மற்ற நபர்களை விட இயேசுவின் வாழ்வில் மக்கள் ஒரு புத்தெழுச்சியையும், வித்தியாசத்தையும் கண்டனர். அவரது பேச்சையும், போதனையை கேட்க மக்கள் திரள் திரளாய் அவரை நோக்கி வந்தனர்.  (யோவான் 6 : 6 - உடல்நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.)  (மத்தேயு 5 : 1 - இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.)  எப்போதும் மக்கள் அவரை தேடி வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது இயேசுவின் நண்பர்களான சீடர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.    நண்பர்கள் / Friends இயேசுவின் வாழ்வு மற்று...

Our History / எமது வரலாறு (History of the Plantation Community) 200 years of Slavery

Image
  Our History / எமது வரலாறு   வரலாற்றில் ஜொலிப்பவனுக்கும், ஜெயித்தவனுக்கும் மட்டுமே இடமுண்டு என்கிற கூற்று  நம் மத்தியில் பரவலாக உண்டு. ஜெயிப்பவனின்  வரலாறு அதிகமாக பேசப்படும்,  இவ்வாறு ஜெயிப்பவனுக்கு மட்டும் இடம் என்றால் சரித்திரத்தில் மறக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன ? “ Until the Lion tells the story, the hunter will always be the hero.” 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter' 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter' இவை ஆப்பிரிக்க பழமொழிகள், சிங்கம் தனது கதையை சொல்லும் வரை, வேட்டைக்காரனே கதையின் நாயகன். இவ்வுலகம் வெற்றி பெற்றவர்களின் கதைகளையே கேட்கிறது, ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களின் கதைகளையும் , அவர்களின் குரல்களையும், குமுறல்களை நாம் யாரும் கே...

தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு

Image
தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு இத்தலைப்பு பல கிறிஸ்தவர்களின் முகத்தில் ஒரு சுழிப்பை ஏற்படுத்தியிருக்கும்.    19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட பொருளாதார அமைப்பில் சிக்குண்ட உழைக்கும் மக்கள் பண்ணையார் மற்றும் ஜமீன்தார்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்தனர். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சுரண்டப்பட்ட மக்களாய் உரிமையற்ற சமூகமாய் இவர்கள் காணப்பட்டனர், ' பஞ்சம்,பசி, கடன், குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலை, சாதிக்கொடுமை, சுரண்டல், கடுமையான உழைப்பு, மன உளைச்சல், சுதந்திரமின்மை, தண்டனைகள்,பிள்ளைகளும் அடிமைகளாக நடத்தப்படல், உழைப்பவர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படல், குடும்ப பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் ' போன்ற பலவித ஆதிக்க காரணங்களால் இவர்கள் நாளுக்கு நாள் கொடுமை படுத்தப்பட்டனர். எப்படியாவது இந்த அந்தகாரமான பாதாளத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஏங்கிய மக...

தோல் நாவல்

Image
  தோல்  தமிழகத்தில் காணப்பட்ட தோல்சாப்புகளில் சுண்ணாம்பு நீருக்குள் இறங்கி உதிரம் வடிய வடிய உழைத்து, தமக்கான சரியான ஊதியம் கிடைக்காமல் சாதிய கொடுமையினாலும், அடிமைத்தனத்தாலும், சுரண்டப்பட்ட  பாமர மக்களின் வாழ்வியலை இந்நாவல் பிரதிபலிக்கிறது. அடித்தட்டு மக்களாக ஒன்றிணைத்து அடிமைத்தன விலங்குகளை உடைத்து, தன்மானத்தோடு வாழ அடியெடுத்து வைக்கும் உழைக்கும்  மக்களின் வாழ்வியலே இக்கதை.தீண்டாமை, ஏற்றத்தாழ்வு,பணக்கார ஏழை பாகுபாடு, சாதிய வன்மம், அரசியல் சூழ்ச்சிகள்,தேச விடுதலை, சமத்துவ சிந்தனைகள், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள், காதல், அன்பு,பகை, பழிவாங்கல்,ஒற்றுமை, என பல கோணங்களில் எழுதப்பட்ட உழைக்கும் வர்கத்தின் ரத்த சரித்திரமே இவ் தோல் நாவல். சங்கரன்,ஆசிரியர்இருதயசாமி,ஓசேப்பு,அருக்காணி,பிரதர் தங்கசாமி, தோழர் வேலாயுதம், தாயம்மாள், சந்தன தேவன், சிட்டம்மாள், முஸ்தபா மீரான், என பல மக்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சரித்திரத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிம்பங்களே. ஆசிரியர் செல்வராஜின் இவ் நாவல் ரத்தமும் சதையுமாக ...

சாதிப்பார்ப்பது தேவதூஷணம்

Image
                     SAY NO TO CASTEISM                    சாதிப்பார்ப்பது தேவதூஷணம் சாதிப்பார்ப்பது தேவதூஷணம் அண்மையில் ஆசிரியர் டீ செல்வராஜ் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ”தோல்” என்ற நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். மிருக தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி இப்புத்தகம் மிகத் தெளிவாக விவரிக்கிறது. இவ் நாவலில் ஒரு பகுதியில் சில கதாபாத்திரங்கள் இவ்வாறு உரையாடுகிறது, ”பொணம் இந்த வழியா போனா, ஊரே தீட்டுப்பட்டுப போவும், நாங்க கும்பிடுற சாமி எல்லா, ஊரை விட்டு ஓடிப் போயிரும் ஆத்தா! எங்களை எல்லாம் பழிவாங்கிப்போடும் என்றார்கள்….மேல்சாதி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் மக்கள். தமக்கு கீழ் வேலை செய்யும் ஏழையின் உடலை அடக்கம் செய்ய பாதை தர மாட்டோம் என்று கோபமாக கத்துகிறார்கள், மேல் சாதி என தங்களை அழைக்கும் மனித மிருகங்கள். மழையின் காரணமாக மற்ற பாதையில் போக முடியாத நிலையில், மனித உடலை சுமந்த வண்ணம் பாதைக்காக மக்கள் காத்துக்கிடக்கிறார்கள் ஏழை ஜன...

மக்களோடு மக்களாக (Be with the People) கிறிஸ்தவ குருவானவர்கள் போராட்டங்களில் பங்கு பெறலாமா?

Image
    மக்களோடு மக்களாக  ( Be with the People )   இலங்கை நாடாக நாம் ஓர் பாரிய அரசியல் , பொருளாதார , சமூக நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் இக்கட்டுரையை எழுதும் போது , அமைதியான ரீதியில் போராட்டம் ;38 வது நாளாக காலி முகத்திடல் , கொழும்பில் நடைபெற்று வருகின்றது. ஓர் நாட்டு மக்களாக இனம் , மதம் , மொழி ரீதியான பாகுபாடுகளை கடந்து/களைந்து , சிறுவர்கள் , வாலிபர்கள் , தாய்மார் , தந்தைமார் மற்றும் பெரியவர்களாக அநீதி , ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கின்றனர். இப்போராட்டம் ஓர் மக்கள் போராட்டம் , அரசியல் தலைவர்களின் வழிகாட்டல் இல்லாமல் சாதாரண மக்களின் வேதனைகளை உலகறிய செய்த மக்கள் போராட்டம்.   இலங்கையின் கிராமங்கள் , நகரங்கள் என   எல்லா இடங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் காலி முகத்திடலை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர் , ஏன் வருகின்றனர் ? எத w; காக வருகின்றனர் ? முழு நாட்டுக்காக குரல் கொடுக்கும் , போராடும் மக்களோடு தம்மை அடையாளப்படுத்தவும் , தமது ஒத்துழைப்பையும் , அன்பையும் அம்மக்களோடு பகிர்ந்து கொள்ள அவர்கள் காலி முகத்திடலில் ஒன்று கூடு...