தோல் நாவல்
தோல் தமிழகத்தில் காணப்பட்ட தோல்சாப்புகளில் சுண்ணாம்பு நீருக்குள் இறங்கி உதிரம் வடிய வடிய உழைத்து, தமக்கான சரியான ஊதியம் கிடைக்காமல் சாதிய கொடுமையினாலும், அடிமைத்தனத்தாலும், சுரண்டப்பட்ட பாமர மக்களின் வாழ்வியலை இந்நாவல் பிரதிபலிக்கிறது. அடித்தட்டு மக்களாக ஒன்றிணைத்து அடிமைத்தன விலங்குகளை உடைத்து, தன்மானத்தோடு வாழ அடியெடுத்து வைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வியலே இக்கதை.தீண்டாமை, ஏற்றத்தாழ்வு,பணக்கார ஏழை பாகுபாடு, சாதிய வன்மம், அரசியல் சூழ்ச்சிகள்,தேச விடுதலை, சமத்துவ சிந்தனைகள், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள், காதல், அன்பு,பகை, பழிவாங்கல்,ஒற்றுமை, என பல கோணங்களில் எழுதப்பட்ட உழைக்கும் வர்கத்தின் ரத்த சரித்திரமே இவ் தோல் நாவல். சங்கரன்,ஆசிரியர்இருதயசாமி,ஓசேப்பு,அருக்காணி,பிரதர் தங்கசாமி, தோழர் வேலாயுதம், தாயம்மாள், சந்தன தேவன், சிட்டம்மாள், முஸ்தபா மீரான், என பல மக்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சரித்திரத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிம்பங்களே. ஆசிரியர் செல்வராஜின் இவ் நாவல் ரத்தமும் சதையுமாக ...