Posts

Showing posts with the label மலையகஇயேசு

'இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்'

Image
இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்'  மரியாளும் யோசேப்பும் மிகுந்த மனவேதனையோடும் உடல்வலியோடும் தங்குவதற்கு ஓர் இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார், தனது மனைவிக்கு குழந்தையைப் பிரசவிக்கச் சரியான ஓர் இடத்தை என்னால் ஏற்பாடு செய்ய செய்ய முடியவில்லையே! என மனவேதனையோடு யோசேப்பு ஓர் இடத்தை தேடிக்கொண்டே இருந்தார். இடமும் கிடைத்தது ஆனால் அவ்விடம் குழந்தை பிரசவிக்க தகுதியான ஓர் இடம் அல்ல, ஓர் மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிறந்தார். 'அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.' லூக்கா 2 :7   நான் சிறுவனாக இருக்கும் போது மாட்டுத்தொழுவத்தை/மாட்டுப்பட்டியை குறித்தான முதல் அனுபவம் எனக்குக் கிடைத்தது. சிறுவனாக எமது உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது மாட்டிற்கு அவர்கள் பால் எடுக்கும் போது, மாட்டிக்கு ஆட்டிட்கு புல், புண்ணாக்கு கொடுக்கும் போது, அதை மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் போது, அவற்றோடு கொஞ்சி விளையாடும் போது வியப்போடு அதைப் பார்த்துக்கொ...