தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு
தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு இத்தலைப்பு பல கிறிஸ்தவர்களின் முகத்தில் ஒரு சுழிப்பை ஏற்படுத்தியிருக்கும். 19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட பொருளாதார அமைப்பில் சிக்குண்ட உழைக்கும் மக்கள் பண்ணையார் மற்றும் ஜமீன்தார்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்தனர். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சுரண்டப்பட்ட மக்களாய் உரிமையற்ற சமூகமாய் இவர்கள் காணப்பட்டனர், ' பஞ்சம்,பசி, கடன், குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலை, சாதிக்கொடுமை, சுரண்டல், கடுமையான உழைப்பு, மன உளைச்சல், சுதந்திரமின்மை, தண்டனைகள்,பிள்ளைகளும் அடிமைகளாக நடத்தப்படல், உழைப்பவர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படல், குடும்ப பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் ' போன்ற பலவித ஆதிக்க காரணங்களால் இவர்கள் நாளுக்கு நாள் கொடுமை படுத்தப்பட்டனர். எப்படியாவது இந்த அந்தகாரமான பாதாளத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஏங்கிய மக...