எரியும் பனிக்காடு - பி. எச்.டேனியல்


எரியும் பனிக்காடு


எரியும் பனிக்காடு எம்மனதை எரிக்கும் சுடுகாடு 

உயிர்வாழ இவ்வளவு போராட்டமா ? 

உயிர்வாழ இவ்வளவு துன்பமா ?

உயிர்வாழ இவ்வளவு கண்ணீரா ? 

உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நாட்களில் கல்வி கற்ற பாடசாலையிலே உதவி ஆசிரியராக பணி புரியும் ஆசிர்வாதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  ஹாஸ்டலில் இருந்த காலத்தில், வருடத்திற்கு ஒருமுறை திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும், நான் விடுதியில் மாணவனாக இருக்கும் போது எந்திரன்,ஏழாம்-அறிவு போன்ற திரைப்படங்களை பார்த்த மகிழ்வான தருணங்கள் என்மனதில் ஆழமாக பதிந்து இருந்த.

2013 மார்ச் மாதம் Theatre சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லா விடுதி மாணவர்களுக்கும் கிடைத்தது, என்ன படம் ? என்ன படம் ? என்ன படம்? மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வம். 

என்னை மதித்து 'சார் / அண்ணா என்ன படத்துக்கு போறம் சொல்லுங்க' என்று மாணவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.                      நானும் 'ரொம்ப நல்ல படத்துக்கு போறம், சூப்பர் Action படம்னு சொல்லறாங்க' என்று........... சும்மா அடித்து விட்டேன்.  

என்ன படம் பார்க்கப்போகிறோம் என்று யாருக்குமே தெரியவில்லை.... 

பஸ்சில் ஏறி theatre வாசலை அடைந்தோம், பெரிய போஸ்டர் 

'பரதேசி '          

பரதேசி யா!!!!!! யாருடா படம்  டா இது ? யாருக்கும் ஒன்றுமே  தெரியவேயில்லை.....  பெரிய ஏமாற்றம், விறுவிறுப்பான, Commercial  படம் பார்க்க  பார்க்க ஆசையாக வந்த எங்களுக்கு  இது பெரும் இடியாக இருந்தது.  

படம் ஆரம்பமானது, ஏமாற்றத்தோடு படத்தை பார்த்தோம்,  

அனாலும் நேரம் செல்ல செல்ல புது விதமான சினிமாவை அன்றுதான் நான் ரசிக்க ஆரம்பித்தேன். இவ்வளவு காலமும் ஹீரோ வில்லனை ஜெயிக்கும்  கதைகளையும், காதல் கதைகளையும், சமூகத்தின் மேல்தட்டு மக்களின் வாழ்வியலை பார்த்த எனக்கு, முதன் முறையாக அடித்தட்டு அடிமை மக்களின் வாழ்வியலையும், வாழ்கை போராட்டத்தையும் அவர்களின் கோணத்திலிருந்து அவர்களின் குரலை, அவர்களின் கதையை கேட்டது, என் சிந்தனையை தூண்டியது.  

பசிக்கொடுமை, சாதிக்கொடுமை, தீண்டாமை தீவிரமாக தலைவிரித்தாடிய தமிழ்நாட்டின் சில கிராமங்களை கண்முன்கொண்டு வந்து நிறுத்திய டைரக்டர். எஸ்டேட்டில் வேலை செய்ய அழைக்கப்பட்ட  மக்களின் வாழ்வையும், வரலாற்றையும் உண்மையாக வெளிப்படுத்தியிருந்தார். 

                                                                         Title Card

RED TEA என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் படமாக்கப்பட்டது, என்று காலப்போக்கில் அறிந்து கொண்டேன். என்னுடைய இறையியல் ஆய்வு கட்டுரை எழுத்துவதற்கு இப்புத்தகத்தை    5 வருடங்களாக தேடினேன், தேடினேன், தேடினேன் ஆனால் கிடைக்கவேயில்லை. 

இறுதியாக 2021ம் ஆண்டு, பல வருட தேடலுக்கு பிறகு என் மனைவியின் கடும் முயற்சியினால் இப்புத்தகம் என் பிறந்தநாள் பரிசாக எனக்கு கிடைத்தது.

பல வருடங்கள் தொட்டு பார்த்து, வாசிக்க வேண்டும் என்று கையில் எடுத்து, இறுதியாக 2024ம் ஆண்டு இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. .    


எரியும் பனிக்காடு எம்மனதை எரிக்கும் சுடுகாடு 

உயிர்வாழ இவ்வளவு போராட்டமா ? 

உயிர்வாழ இவ்வளவு துன்பமா ?

உயிர்வாழ இவ்வளவு கண்ணீரா ? 

பசியாலும்,பட்டினியாலும்,சாதிக்கொடுமையினாலும், சுரண்டலினாலும் வாடி வதங்கி வாழ்நாளில் துன்பங்களை மாத்திரம் அதிகமாக அனுபவித்தவர்கள்  இம்மக்கள்.

கருப்பனுக்கும்,வள்ளிக்கும் சுகமாய் வயிறார உணவு உண்டு நிம்மதியாய் ஓர் வாழ்வு வாழ வேண்டும் என்பதே அவர்களின் கனவு. 

கனவு களைந்து, சிதைந்து என்னவானது என்பதே இவர்களின் கதை. கனவுகளோடு லட்சக்கணக்கான கருப்பன்களும், வள்ளிகளும் எம்முன் புதையுண்டு உரமாகி இருக்கிறார்கள்.   

மனிதர்களின் வார்த்தைகளை நம்பி வாழ்விழந்தவர்கள் இந்தப்பாவிகள்............. அப்பாவிகள்.  






Comments

Popular posts from this blog

144 Anniversary of St.Margaret's Church, Kotagala

உடைத்தல் + உருவாக்குதல்

Plantation Life and Ishalini (Child Labour)