Lent - தவக்காலம்- 2024
உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கப்படுகின்றது.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம். இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் காலம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது. ஆகவே நாம் அனைவரும் உண்மையான நோன்பு இருந்து, மனமாற்றம் பெற்று, ஒப்புரவாகி, பயனுள்ள விதத்திலே இவ் நாற்பது நாள் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த நாற்பது நாட்களை நமது வாழ்வின் முக்கியமான நாட்களாக கருதுவோம். இவ்வருடம் எமக்கு கொடுக்கப்பட்ட சவால், தொலைநோக்கு 'சீடராகுவோம் சீடராக்குவோம்' இந்த 40 நாட்களிலும்,எம் வாழ்வில் இயேசுவின் மெய் சீடர்களாக அவரின் உண்மை வழியில் நடக்க தூய ஆவியானவர் எமக்கு அருள் புரிவராக.


Comments
Post a Comment