கதறும் இறையியல்
கதறும் இறையியல்
நாளுக்கு நாள் இயற்கையானது மனிதனின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி அழுது கொண்டிருக்கிறது. மனிதனின் தவறான செயமுறைகள் காரணமாக இயற்கையானது ஓர் தாயை போல தினமும் பிரசவ வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறது. (உரோமையர் 8: 22) பிரசவ வலியானது எப்படி ஓர் உடலின் அதிகபற்ச பாகங்களை வேதனைக்குள்ளாகுமோ அதேபோல இயற்கையானது பல வேதனைகளை சுமந்து கொண்டு எம்மத்தியில் கண்ணீர் வடிக்கிறது. மனிதனின் பேராசை, அலட்சியம், பணமோகம் ஆகிய காரணிகள் இயற்கையை கூறுபோட, சுரண்ட முக்கியமான காரணிகளாக இருக்கிறது. இதனால் இயற்கை இரத்தம் சிந்தி துன்பப்படுகிறது.
'கடவுள் தாம் படைத்த
அனைத்தையும்
நோக்கினார், அவை
மிகவும்
நன்றாய்
இருந்தன எனக்
கண்டார்'
என தொடக்கநூல் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது. நன்றாய் இருந்த அனைத்தையும் ஆண்டவர் தான் உருவாக்கிய மனிதரிடம் கொடுத்துஇ இதை 'பாதுகாத்து, பராமரித்து மண்ணுலகில்
பல்கி
பெருகுங்கள்'
என்றார். இப்படி ஒரு கொடையாக, பரிசாக இவ்இயற்கையானது கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் எமது தினசரி செயல்களினால், பேராசையினாலும் இப்படைப்பு தினசரி துன்பப்படுகிறது.
இப்பின்னணியில்
யோவான்
19 : 28 வசனத்தை நாம் வாசிக்கும் போது, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு மரணத்தருவாயில் 'தாகமாய் இருக்கிறது'
என்று கதறுகிறார். வேதனையோடு, பெலனில்லாமல், உடல் வலியோடு, இரத்தம் தலையில் இருந்து கால் வரை வழிந்தோட, பேச சக்தி இல்லாத நேரத்தில் 'தாகமாய் இருக்கிறது'
'நான்
தாகமாய்
இருக்கிறேன்'
என்று கதறுகிறார் இயேசு.
'தாகமாய் இருக்கிறேன்'
என்கின்ற இந்த கதறலின் எதிரொலி, இயற்கையின் கதறலாகவும், நீதிக்காக நீயாயத்திற்காக போராடும் மக்களின் கதறலாகவும், சமத்துவத்திக்காய் உழைக்கும் ஒவ்வொருவரின் கதறலாகவும், அடிமைத்தனத்தை ஒழிக்கும் கதறலாகவும், ஓரங்கட்டப்பட்ட மக்களை மையத்திற்கு கொண்டு வரும் கதறலாக இன்றும் ஒலித்து கொண்டே இருக்கிறது.
யோவான்
நற்செய்தியானது நெஸ்டோரிய பேதகத்திற்கு எதிராக எழுதப்பட்டது. அக்காலத்தில் மக்கள் கடவுளை குறித்து பல்வேறான நம்பிக்கைகளை கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். அதில் கடவுள் நமது அன்றாட வாழ்வோடு தொடர்புபடாதவர், மனிதனோடு தொடர்பில்லாதவர், மனிதனின் வேதனைகளை அறியாதவர், அவர்களின் கவலைகள், கஷ்டங்கள் கடவுளுக்கு புரியாது, தெரியாது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனாலும் யோவான் நற்செய்தியின் இறுதியில் யோவான் 19 : 28ல் இயேசுவின் தாகத்தின்
கதறல் அவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்குற்படுத்துகிறது.
LOGOS/லோகோஸ், தெய்விக வார்த்தை வற்றாத நீரூற்று இங்கு தாகத்தால் கதறுகிறது. இக்கதறல், இகண்ணீர் இயேசுவின் தெய்வீக சுபாவத்தையும் அவரின் மனுடத்தன்மையையும் இணைக்கிறது.இயேசுவின் இக்கண்ணீர், கதறல் இன்றும் எம்மத்தியில் கண்ணீர்விடும், கதறும் மக்களோடு தன்னை அடையாளப்படுத்துகிறது.
இயேசு
துன்புறும், ஒடுக்கப்படும், ஓரங்கட்டப்படும், புறந்தள்ளப்படும், வெறுக்கப்படும், மக்களோடு எப்போதும் தன்னை அடையாளப்படுத்தினார். இயேசுவின் தாகத்தின் தவிப்பு காய்ந்து போயுள்ள மரங்களின் தவிப்பு, வறண்டு போயுள்ள நீர்நிலைகளின் தவிப்பு, வெட்டப்பட்டு கிடக்கும் காடுகளின் தவிப்பு, பெரிய இயந்திரங்களினால் தோண்டப்படும் மலைகளின் தவிப்பு,சுரண்டப்பட்டஇயற்கை வளங்களின் தவிப்பு, துஷ்பிரயோகப்படுத்தப்படும் மிருகங்களின், பறவைகளின் தவிப்பு ஆகும்.
முழு
படைப்பும் 'எம்மை காப்பாற்றுங்கள்! எம்மை
காப்பாற்றுங்கள்
!' என்று
தாகத்தால்
தவிக்கிறது.
இயேசுவின்
சிலுவை கதறல் முழு உலகிற்கும் ஓர் பாரிய சவாலை முன்வைக்கிறது. இயேசுவின் தாகம் அவரின் உடல் தாகம் மட்டுமல்ல முழு உலகத்திற்கான தாகம். இன்று எம்மத்தியில் தாகத்தோடு இருக்கும் ஒவ்வாருவரை குறித்து சிந்திக்க இயேசுவின் தவிப்பு எம்மை உந்தித்தள்ளுகிறது. திருச்சபையாக மனிதனின் தீச்செயலால் சமூகத்தில் வரண்டு இருக்கும் இடங்களை அடையாளம் கண்டு அதற்கான பணிகளை செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். (பொருளாதார சுரண்டல், நீதிக்கான தாகம், சமத்துவத்திக்கான தாகம்)

Comments
Post a Comment