சமகால இறைவாக்கினர்/ Contemporary Prophet ''Martin Luther king Jr"

 

 



சமகால இறைவாக்கினர்

ஒவ்வெரு  ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றவாது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கா மக்களின் நம்பிக்கை நாயகனாகவும் செயல் வீரனாகவும் இருந்தவர் மார்ட்டின் லூதர் கிங். மனித மாண்பு அற்ற சூழ்நிலையில் நிறத்தின் காரணமாகவும் பல்வேறு சமூக காரணங்களினால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட கறுப்பின மக்களின் குரலாக இவர் ஒலித்தார். தமது தன்மானத்தையும் உரிமைகளை இழந்து இனவாதத்தின் கொடுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு உங்கள் உரிமைகளுக்காக அறவழியில் மற்றும் அஹிம்சை வழியில் போராடுங்கள் என் உட்ச்சகப்படுத்தி அவர்களோடு போராடியவர் இவரே.

ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைக்கு அமைவாக, சிங்கம் கர்ச்சனை செய்கின்றது; அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?( ஆமோஸ் அதிகாரம் 3: 8) என்பதை போல சமூக அநீதிகளை பார்த்து அமைதியாக இருக்க அவர் விரும்பவில்லை Our lives begin to end, the day we become silent about things that matter’’, முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் கதைக்காமல் அமைதியாக இருக்கும் நாளில் நம் வாழ்க்கை முடிவடைகிறது’ என்றார்.

சமகால இறைவாக்கினராக அநீதியை எதிர்த்து இவர் பேசிய பேச்சு வரலாற்றை புரட்டிபோட்டு ஓர் பாரிய மாற்றத்திட்கு வித்திட்டது. 20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த சொற்பொழிவுகளைக் குறித்து அமெரிக்க நாட்டில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின் இறுதியில் அந்நாட்டில் கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய "I have a dream" அதாவது "எனக்கொரு கனவு உண்டு" என்ற உரையே தலை சிறந்த உரை என்று கணிக்கப்பட்டது.  ஒவ்வெரு ஆப்பிரிக்க அமெரிக்கரையும் தனது சுதந்திரத்துக்காகப் போராடவைத்த அந்த உரையின் சுருக்கம் பின்வருமாறு

எனக்கொரு கனவு உண்டு... "எல்லா மனிதரும் சமம் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை" என்று இந்த நாடு சொல்லும் உறுதிப்பிரமாணம் உண்மையாகும் என்ற கனவு எனக்கு உண்டு.

நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் ஜார்ஜியாவின் செம்மலையில் அடிமைகளின் வாரிசுகளும் அடிமை முதலாளிகளின் வாரிசுகளும் சகோதரத்துவ மேடையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஒருநாள் மிசிசிபியின் நிலை அநீதியின் அடக்குமுறையின் இடம்  இல்லாத சுதந்திரமும் நீதியும் நிறைந்த பாலைவனச் சோலையாக உருமாறும்.

எனக்கொரு கனவு உண்டு... எனது நான்கு பிள்ளைகளும் வாழப்போகும் இந்த நாட்டில் அவர்களது குணத்தையும் அறிவுத்திறனையும் பார்த்து அவர்கள் மதிக்கப்படுவார்களே தவிர அவர்களது தோல் நிறத்தை வைத்து அல்ல என்ற கனவு எனக்கு உண்டு.

ஒவ்வொருபள்ளத்தாக்கும் உயர்த்தப்படும் ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும் கரடுமுரடான பகுதிகள் சம நிலமாக்கப்படும் கோணலான பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும் இதை அனைவரும் ஒருசேரக் காண்பர். எனக்கொரு கனவு உண்டு...

எனக்கு ஓர் கனவு உண்டு, என்ற அந்த வார்த்தைகள் பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்  ஓர் உந்து சக்தியாக இருந்தது. அநீதியான சூழ்நிலையில் அமைதி காக்காமல் நீதிக்காக அவர் அதிகம் பாடுபட்டார். கடவுளின் இறைவாக்கினராக சமத்துவத்திட்காகவும் இனவாத அடிமை கட்டுக்களிலிருந்து மக்களை விடுதலை செய்யும் விடுதலையாளனாக இவர் செயட்பட்டார்.      

மார்ட்டின் லூத்தரை கிங்கை குறித்து சிந்திக்கின்ற நாம், நம் வாழ்விலும் இனவாதம், மதவாதம் சாதியம், நிறவேறுபாடு, பிரதேசவாதம், ஏழை பணக்கார பாகுபாடு,படித்தவன் பாமர வேறுபாடு,  போன்றவற்றை தகர்த்து கடவுளின் பிள்ளைகளாக சமத்துவத்தை நோக்கியும் மனித மாண்பை பாதுகாப்பவர்களாக மாறவேண்டும்.

அருட்பணி. ரூபன் பிரதீப்

பரிசுத்த மகதலேனா மரியாள் ஆலயம் அம்பாறை

 

Comments

Popular posts from this blog

144 Anniversary of St.Margaret's Church, Kotagala

உடைத்தல் + உருவாக்குதல்

Plantation Life and Ishalini (Child Labour)