Posts

Showing posts from June, 2022

சாதிப்பார்ப்பது தேவதூஷணம்

Image
                     SAY NO TO CASTEISM                    சாதிப்பார்ப்பது தேவதூஷணம் சாதிப்பார்ப்பது தேவதூஷணம் அண்மையில் ஆசிரியர் டீ செல்வராஜ் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ”தோல்” என்ற நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். மிருக தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி இப்புத்தகம் மிகத் தெளிவாக விவரிக்கிறது. இவ் நாவலில் ஒரு பகுதியில் சில கதாபாத்திரங்கள் இவ்வாறு உரையாடுகிறது, ”பொணம் இந்த வழியா போனா, ஊரே தீட்டுப்பட்டுப போவும், நாங்க கும்பிடுற சாமி எல்லா, ஊரை விட்டு ஓடிப் போயிரும் ஆத்தா! எங்களை எல்லாம் பழிவாங்கிப்போடும் என்றார்கள்….மேல்சாதி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் மக்கள். தமக்கு கீழ் வேலை செய்யும் ஏழையின் உடலை அடக்கம் செய்ய பாதை தர மாட்டோம் என்று கோபமாக கத்துகிறார்கள், மேல் சாதி என தங்களை அழைக்கும் மனித மிருகங்கள். மழையின் காரணமாக மற்ற பாதையில் போக முடியாத நிலையில், மனித உடலை சுமந்த வண்ணம் பாதைக்காக மக்கள் காத்துக்கிடக்கிறார்கள் ஏழை ஜன...