Posts

Showing posts from April, 2022

சமகால இறைவாக்கினர்/ Contemporary Prophet ''Martin Luther king Jr"

Image
    சமகால   இறைவாக்கினர் ஒவ்வெரு   ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றவாது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் தினமாக அனுசரிக்கப்படுகிறது . அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கா மக்களின் நம்பிக்கை நாயகனாகவும் செயல் வீரனாகவும் இருந்தவர் மார்ட்டின் லூதர் கிங் . மனித மாண்பு அற்ற சூழ்நிலையில் நிறத்தின் காரணமாகவும் பல்வேறு சமூக காரணங்களினால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட கறுப்பின மக்களின் குரலாக இவர் ஒலித்தார் . தமது தன்மானத்தையும் உரிமைகளை இழந்து இனவாதத்தின் கொடுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு உங்கள் உரிமைகளுக்காக அறவழியில் மற்றும் அஹிம்சை வழியில் போராடுங்கள் என் உட்ச்சகப்படுத்தி அவர்களோடு போராடியவர் இவரே . ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைக்கு அமைவாக , சிங்கம் கர்ச்சனை செய்கின்றது ; அஞ்சி நடுங்காதவர் எவர் ? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க , இறைவாக்கு உரைக்காதவர் எவர் ?( ஆமோஸ் அதிகாரம் 3: 8) என்பதை போல சமூக அநீதிகளை பார்த்து அமைதியாக இருக்க அவர் விரும்பவில்லை ‘ Our lives begin to end,...

‘இயேசு ஓர் நீதிக்கான போராளி’

Image
                                                                           ‘ இயேசு ஓர் நீதிக்கான போராளி’ மார்ச் 31 ம் , திகதிக்கு பின்பதாக இலங்கை நாட்டின் எல்லா நகரங்களிலும் காட்டுத்தீயைப் போல பரவியது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை. மக்கள் தமது வீடுகளில் இருந்து மௌனம் காக்க முடியாமல் தெருவில் அநீதிக்கும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள். அடித்தட்டு மக்களின் குரல்கள் இன்று இலங்கை நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கிறது. சாமான்ய மனிதனின் வேதனை இன்று உலகிற்கே அம்பலமாகியுள்ளது. ஆசியாவின் ஆச்சரியம் என மார்தட்டிய நாடு இன்று அதிக கடன் சுமையினாலும் ; ஊழலினாலும் ஆசியாவின் அவமானமாக சித்தரிக்கப்படுகிறது. நமது நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் நீண்ட நீண்ட வரிசைகள் , இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் நான் வாசித்த கவிதை பின்வருமாறு , ‘ அதிகாலையில் குழந்தைகள் அழுகிறார்கள் பால்மா இல்லை , காலையில் ஆண்க...