தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? Life of a Plantation Child
தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? https://time.com/3984024/maternal-mortality-photos/ தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய், இல்லாட்டி மாடு மேய்க்க போடா........ நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற? நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல, இங்க வந்து என் உயிர எடுக்காதீங்கடா என கோபமாக கத்தினார் ஆசிரியர்...... தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? இவ்வார்த்தைகள் மணியின் மனதை துளைத்துகொண்டே இருந்தது, தனது நண்பர்கள் முன்னே தன்னை ஆசிரியர் இவ்வாறு பேசியது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மனக்கஷ்டத்தையும், அவமானத்தையும் அடக்கிக்கொண்டு சகஜமாக தனது கல்வி காரியங்களில் ஈடுபட முயற்சித்தான். மலையகத்தில் கல்வி கற்ற,கல்வி கற்கும் நிறைய மாணவர்களுக்கு இக்கேள்வி ஓர் புதிய கேள்வி அல்ல, தனது பெற்றோர் படும் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது வெளியே வர துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் இவ் அனுபவங்களை தாண்டி வந்திருப...