Posts

Showing posts from November, 2022

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? Life of a Plantation Child

Image
  தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? https://time.com/3984024/maternal-mortality-photos/ தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய்,  இல்லாட்டி மாடு மேய்க்க போடா........ நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற? நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல, இங்க வந்து என் உயிர எடுக்காதீங்கடா என கோபமாக கத்தினார் ஆசிரியர்...... தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? இவ்வார்த்தைகள் மணியின் மனதை துளைத்துகொண்டே  இருந்தது, தனது நண்பர்கள் முன்னே தன்னை ஆசிரியர் இவ்வாறு பேசியது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மனக்கஷ்டத்தையும், அவமானத்தையும் அடக்கிக்கொண்டு சகஜமாக தனது கல்வி காரியங்களில் ஈடுபட முயற்சித்தான்.   மலையகத்தில் கல்வி கற்ற,கல்வி கற்கும் நிறைய மாணவர்களுக்கு இக்கேள்வி ஓர் புதிய கேள்வி அல்ல, தனது பெற்றோர் படும் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது வெளியே வர துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் இவ் அனுபவங்களை தாண்டி வந்திருப...

Friends, Food and Fellowship

Image
Friends, Food and Fellowship  யோவான் 15 : 12 - 13 நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.  இயேசுவின் வாழ்நாளை பார்க்கும் பொழுது, அவர் ஓர் மக்கள் மனிதன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், ஏனெனில், எப்போதும் அவரை சுற்றி மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. மற்ற நபர்களை விட இயேசுவின் வாழ்வில் மக்கள் ஒரு புத்தெழுச்சியையும், வித்தியாசத்தையும் கண்டனர். அவரது பேச்சையும், போதனையை கேட்க மக்கள் திரள் திரளாய் அவரை நோக்கி வந்தனர்.  (யோவான் 6 : 6 - உடல்நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.)  (மத்தேயு 5 : 1 - இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.)  எப்போதும் மக்கள் அவரை தேடி வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது இயேசுவின் நண்பர்களான சீடர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.    நண்பர்கள் / Friends இயேசுவின் வாழ்வு மற்று...