Posts

Showing posts from July, 2022

தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு

Image
தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு இத்தலைப்பு பல கிறிஸ்தவர்களின் முகத்தில் ஒரு சுழிப்பை ஏற்படுத்தியிருக்கும்.    19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட பொருளாதார அமைப்பில் சிக்குண்ட உழைக்கும் மக்கள் பண்ணையார் மற்றும் ஜமீன்தார்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்தனர். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சுரண்டப்பட்ட மக்களாய் உரிமையற்ற சமூகமாய் இவர்கள் காணப்பட்டனர், ' பஞ்சம்,பசி, கடன், குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலை, சாதிக்கொடுமை, சுரண்டல், கடுமையான உழைப்பு, மன உளைச்சல், சுதந்திரமின்மை, தண்டனைகள்,பிள்ளைகளும் அடிமைகளாக நடத்தப்படல், உழைப்பவர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படல், குடும்ப பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் ' போன்ற பலவித ஆதிக்க காரணங்களால் இவர்கள் நாளுக்கு நாள் கொடுமை படுத்தப்பட்டனர். எப்படியாவது இந்த அந்தகாரமான பாதாளத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஏங்கிய மக...

தோல் நாவல்

Image
  தோல்  தமிழகத்தில் காணப்பட்ட தோல்சாப்புகளில் சுண்ணாம்பு நீருக்குள் இறங்கி உதிரம் வடிய வடிய உழைத்து, தமக்கான சரியான ஊதியம் கிடைக்காமல் சாதிய கொடுமையினாலும், அடிமைத்தனத்தாலும், சுரண்டப்பட்ட  பாமர மக்களின் வாழ்வியலை இந்நாவல் பிரதிபலிக்கிறது. அடித்தட்டு மக்களாக ஒன்றிணைத்து அடிமைத்தன விலங்குகளை உடைத்து, தன்மானத்தோடு வாழ அடியெடுத்து வைக்கும் உழைக்கும்  மக்களின் வாழ்வியலே இக்கதை.தீண்டாமை, ஏற்றத்தாழ்வு,பணக்கார ஏழை பாகுபாடு, சாதிய வன்மம், அரசியல் சூழ்ச்சிகள்,தேச விடுதலை, சமத்துவ சிந்தனைகள், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள், காதல், அன்பு,பகை, பழிவாங்கல்,ஒற்றுமை, என பல கோணங்களில் எழுதப்பட்ட உழைக்கும் வர்கத்தின் ரத்த சரித்திரமே இவ் தோல் நாவல். சங்கரன்,ஆசிரியர்இருதயசாமி,ஓசேப்பு,அருக்காணி,பிரதர் தங்கசாமி, தோழர் வேலாயுதம், தாயம்மாள், சந்தன தேவன், சிட்டம்மாள், முஸ்தபா மீரான், என பல மக்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சரித்திரத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிம்பங்களே. ஆசிரியர் செல்வராஜின் இவ் நாவல் ரத்தமும் சதையுமாக ...