வைரமுத்து அவர்களின் வைர எழுத்துக்களால் செதுக்கப்பட்டது மூன்றாம் உலகப் போர். இயற்கை, விஞ்ஞானம், சூழலியல் , சமூகவியல்,பொருளியல், கிராமியவாழ்வு,நகர வாழ்வு, விவசாயத்தின் மேன்மைகள்,விவசாயிகளின் சாபக்கேடான வாழ்க்கை, கோபம்,வீரம்,பாசம்,சூழ்ச்சி,காதல்,. ஏமாற்றம் ,அழுகை ,பூரிப்பு , சந்தோஷம் ,மனக்கவலை, போன்ற உலகத் தகவல்களோடு உணர்ச்சிகளையும் புகுத்தி எம் கண் முன் உயிரோடு உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர். வைரமுத்து அவர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான் ஆனால் அவரின் எழுத்துக்களை முதன்முதலாக வாசிக்கின்றேன், கதாபாத்திரங்களை உயிரோடு உண்மையிலேயே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், அவரின் வார்த்தைகளுக்கு வாழ்வுள்ளது.அவரின் மனிதர்களுக்கு சீவனுள்ளது. அட்டணம்பட்டியில் ஒருவனாக கருத்தம்மாயி, சிட்டம்மா,முத்துமணி,சின்னப்பாண்டி, எமிலி இஹி,சீனிச்சாமி, போன்றோருடைய வாழ்ந்த அனுபவம் இவ் வாசிப்பு. நான் இப்படிப்பட்ட ஒரு பதிவை எழுதியதே இல்லை எனினும் எழுதியதன் காரணம் இப்புத்தகத்தின் மேன்மை.